மீதிச் சில்லறை வாங்கியதில்
நான்கைந்து நிறுத்தங்களைக்
கடந்த பின்பும் விரல்கள்
எறிந்து நிற்கிறேன் .
விரல் தீண்டலைத்
தீட்டாய் நினைக்கும்
தீட்சிதர் மேலேன்றேன் .
பாதிப் பிரசாதம் காற்றிலே
கரைந்து போகையிலும்
கைகளையடையும் மீதியினில்
கடவுளைக் கண்டேன் .
விரல் பிசையா நடத்துனர்
ஒருவருண்டா என
நித்தம் தேடியே
நிற்கிறேன் மாநகரப் பேரூந்தில் .
