ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஒவ்வொருமுறை ஊர் போகும்போதும் அணையில் எவ்வளவு நீர் இருக்கிறது அணை எப்படி இருக்கிறது இதை பார்ப்பதே ஒரு வேலையாய் இருக்கும் . அண்மைக் காலங்களில் அணையின் நிலைமையைப் பார்த்தால் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் அணை என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமோ என்று இருக்கிறது . வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி இந்த நதி கடலில் கலக்கும் வரையிலும் அதன் நீர் படும் இடங்கள் எல்லாம் செழித்து இருக்கும் . தாமிரபரணியின் கடைசி நீர்த் தடுப்பு ஸ்ரீவைகுண்டம் அணை .இதன் பின்னர் இந்த நதியின் நீரைத் தேக்கி வைக்கும் எந்த திட்டமும் எங்கும் செயல்படுத்தப் படவில்லை என்பது மழைக் காலங்களில் கடலில் கலக்கும் நீர் சொல்லும் . அணையின் வடகால் ,தென்கால் என்று இரண்டு பெரிய கால்வாய்களின் மூலம் பல ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்ட விளை நிலங்களில் பாசனம் செய்யப் படுகிறது .அதுமட்டும் இன்றி மக்களின் குடி நீருக்கும் இதுவே ஆதாரம் .தாமிரபரணி என்ற ஒன்று இல்லாமல் மட்டும் இருந்திருந்தால் அந்நிலப் பரப்பு முழுமையும் வெறும் உப்பு நீர் மட்டுமே கிடைக்கக் கூடும் .
தென் மதகின் முக்கிய நீர்ப் பிடிப்பு கடம்பா ஏரி, இந்த ஏரியின் கீழ் நேரிடைப் பாசனம் பெறும் விளைநிலங்கள் ஏராளம் . அதுமட்டுமின்றி இதில் இருந்து செல்லும் கால்வாய் மூலம் திருசெந்தூர் வரையிலான சிறு குளங்கள் நிரம்பி அதன் மூலம் விவசாயம் நடக்கும் .இங்கு பயிரிடப் படும் முக்கியப் பயிர்கள் நெல் ,வாழை,உளுந்து . சில பகுதிகளில் மட்டும் மஞ்சள் ,தென்னை ,வெற்றிலைக் கொடி, நிலக்கடலை போனறவையும் குறிப்பிட்ட அளவில் விளையும் . வடமதகின் மூலம் ஆத்தூர் வரையிலான பாசனப் பகுதிகளில் விவசாயம் நடைபெறுகின்றது .ஆறுமுகநேரி குளத்தில் போய்ச் சேரும் வட மதகு அங்கிருக்கும் மினரல கம்பனிக்கும் நீர் ஆதாரம் .(உறிஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க ). இப்படி பல ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் தாமிரபரணி நதியையும் சில அடி உயரங்களைக் கொண்டு தடுப்புச் சுவருடன் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அணையும்தான்.
திமுக ,அதிமுக ,காங்கிரஸ் எது இந்தத் தொகுதியை ஆண்டால் என்ன ஆண்டாண்டு காலமாய் இந்த அணையின் நிரந்தர ஆட்சியாளர்கள் நாங்கள்தாம் என்று போட்டி போட்டுக் கொண்டு குளித் தாமரையும் ,அமலைச் செடியும் ஆட்சி புரிகின்றன .நீங்கள் மட்டும்தான் ஆளுவீர்களா நாங்கள் மட்டும் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்போம் என்று கரையோரத்தில் இருந்த மரங்கள் தற்பொழுது ஆற்றின் நடுவில் இருக்கின்றன . மெதுமெதுவாய் படிந்த மணல் திட்டாகி திட்டு மேடாகி இன்று ஆற்றின் நடுவில் ஒரு தீவு போல் இருக்கிறது .எல்லாவற்றையும் தாண்டி வேலி காத்தான் என்றழைக்கப்படும் செடியும் உள்ளே இருக்கிறது .இந்தச் செடியின் குணம் வேர்கள் அசுர வேகத்தில் வளரக் கூடியவை குறுகிய காலத்திலேயே பரந்த நிலப் பரப்பை தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் .அவ்வளவு எளிதில் அழிக்க முடியாதது நெருக்கமாகவும் வளரக் கூடியது .மூங்கில் கம்பு போன்ற தோற்றம் கொண்டு இச்செடிகள் நடுவில் வேறெந்த செடியும் வளர இடம் இல்லாத அளவில் இதன் வேர்கள் மண்ணை பிடித்துக் கொள்ளும் .ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும் இந்த அணையை நாங்கள் அகலப் படுத்துவோம் ,ஆழபடுத்துவோம் என்றனர் அண்மையில் இதில் படகுக் குலாம் அமைத்து சுற்றுலாத் தளமாக மாற்றுவோம் என்றனர் .இதுபோன்ற வெறும் வாய்ச்சவடால்களுக்கு அங்கொன்றும் குறைவில்லை .இந்த மாதிரியான காற்றில் பறக்கும் திட்டங்களைச் சொல்லி வெற்றி பெற்றவுடன் எந்தக் கட்சியின் சார்பிலும் இதுவரையிலும் அந்த அணையின் சார்பாய் ஒரு ..................கூட பிடுங்கவில்லை என்பது அந்த வைகுண்டநாதரும் மக்களும் மட்டுமே அறிந்த உண்மை .
எந்த MLA ,MP க்கு எத்தனை வீடுகள் உள்ளன ,எந்த நேரத்தில் எங்கு இருப்பார் என்று அதி பயங்கரமாய் புலனாய்வு செய்து முதல் பக்கத்திலும் முக அட்டையிலும் போட்டு பரபரப்பு கூட்டும் பத்திரிகைகள் அழிந்து கொண்டிருக்கும் இந்த அணையையும் அந்தப் பகுதி மக்களின் விவசாயத்தையும் காக்கவும் கொஞ்சம் கண் திறக்கலாமே .கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் தொடர்ந்து ஒரு விசயத்தைப் பற்றிய செய்திகள் வரும் பட்சத்தில் அரசின் கண்களுக்கு இந்த விசயமும் தெரிய வருமே . அணையின் படகுக் குலாமும் வேண்டாம் சுற்றுலாவும் வேண்டாம் தண்ணீர் மட்டும் போதும் .இதற்கு ஒரே வழி அணையை சீர் படுத்துவது களைச் செடிகளை களைந்து ஆழப் படுத்தினாலே போதும் .ஒரு முறை செய்தாலே பல வருடங்கள் தாங்கும் எந்த அரசாவது இதைச் செய்யாதா என்பதே அங்கிருக்கும் ஒவ்வொரு விவசாயின் விருப்பமும் கூட .இதை முழுக்க முழுக்க அரசின் பார்வைக்கு கொண்டு செல்லும் ஒரே வழி பத்திரிக்கை துறை மட்டுமே .மேற் சொன்ன விஷயங்கள் மட்டும் நடந்தால் அங்கிருக்கும் மக்கள் எந்தப் புண்ணியவான் பண்ணிய நல்ல காரியமோ என்று உங்களை மனதார வாழ்த்துவர் .பிரதிபலன் பார்க்காமல் ஒரு பத்திரிகையாவது இதைச் செய்யாதா என்று எதிர் பார்த்திருக்கும் பலாயிரக்கனக்கான விவசாயிகளுள் ஒரு விவசாயியின் ஒரு சிறு அடி இது .அணையின் சார்பாக போராட்டங்கள் அதன் மூலம் அரசின் பார்வை என்பதெல்லாம் அங்கே நடக்காத விஷயம் .