skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Friday, October 8, 2010

குலசை தசராவும் - நவராத்திரி கொலுவும்



அக்டோபர் 17 , தமிழ் மாதத்தில் புரட்டாசி தசரா ஆமாம் எனக்கு தசரா மட்டுமே தெரியும் . எதேச்சையாய் நினைவுக்கு வந்தது இது புரட்டாசி மாதம் என்பது .

(அந்தளவு நான் ரொம்ப பிசி ,என்ன கிழமை நடக்குது என்பதே மொபைல் பார்த்து தெரிஞ்சுக்குறேன்

திடீர் மழைக்கு முளைத்த காளான் போல முளைத்திருந்த சாலையோரக் கடைகள் அதிகமாய் பொம்மைக் கடைகள் . பல வண்ணங்களில் பற்பல உருவங்களில் சிறியதும் பெரியதுமாய் இருக்கும் பொம்மைகள் பார்க்கையில் மனது ஏனோ குழந்தை மாதிரி ரசிக்கச் செய்கிறது . பயண நேரங்களில் என்னை கடந்து போகும் கட்டிடங்களை பார்க்கையில் அதிலுருக்கும் வேலைப்பாடுகள் எப்படி இப்படியெல்லாம் கட்ட முடிகிறது என்ற கோணத்திலேயே பார்க்க வைக்கும் . ஒரு சராசரி மனிதனின் பார்வைக்கும் கட்டிடக்கலை பொறியியல் படித்தவன் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வித்தியாசங்கள் மாறுபடும் .

அண்மையில் நாங்கள் நண்பர்கள் நால்வர் ஒரு  புகுமன புகு விழாவில் கலந்துகொண்டோம் .கூட வந்திருந்த நண்பர்களில்  இரண்டு மின்துறை பொறியாளர்கள் (தற்பொழுது IT துறையில் பணி )  நாங்கள் இரண்டு பேர் சிவில் .போன வேலையை வெகு திற்ப்தியாய் செவ்வனே செய்து வந்தோம் (வேறென்ன சாப்பாடுதான் ) வீடு வந்தும் புது வீடு  பற்றிய தொடர் பேச்சில் எங்கள் நண்பர்களின் பார்வையும் எங்களின் பார்வையும் வேறு பட்டிருந்தது . அவர்களின் பார்வை சாப்பாட்டிலும் வீட்டுப் பெண்களின் பட்டிலும் இருந்தது . எங்களின் பார்வையில் சாப்பிட்ட ரூம் attached   பாத்ரூம் இருந்ததா ? loft இருந்ததா என்று இருந்தது .ப்ரெண்டும் எப்படி அதுக்குள்ளே இதெல்லாம் பார்த்தீங்க என்று ஆச்சர்யமுடன் வினவ இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்றோம் .(எல்லாம் ஒரு சுயசொரிதல்தான் )

இதைப்போலவேதான் பார்க்கும் பொம்மைகளிலும் பார்வை இருந்தது அதன் ஒவ்வொரு வடிவத்திலும் எப்படி இவ்வளவு தத்ரூபமாய் வெறும் மண் , சாயம் , அச்சு மட்டும்  வைத்து இவர்களால் செய்ய முடிகிறது ? நாளாக நாளாக கடந்த ஒருவாரத்தில் மட்டும் அந்த சாலையின் இருபுறமும் பொம்மைகளினால் மூடப் பட்டுள்ளது .கடைகளைக் கடக்கையில் அந்தப் பொம்மைகளை வாங்க வேடிக்கைப் பார்க்கும் பெண்களையும் குழந்தைகளையும் கூடவே அவர்கள் ஆசைப் பட்டு வாங்க நினைத்த பொம்மையொன்று யானை விலையில் சொல்லக் கேட்டு அவர்களின் முகத்தில் தோன்றும் வருத்தங்களையும் சேர்த்தே கடந்து போகின்றேன் . ஆரம்ப காலக் கடைகளின் தொடர்ச்சியான பொம்மை பார்வைகளால் இந்த மாதம் நவராத்திரி ,கொலு வைக்கும் மாதம் என்று என் சிறு  மூளைக்கு விளங்க ஆரம்பித்தது . இன்று வரை வாழ்வில் ஒருமுறை கூட கொலு வைத்ததும் இல்லை அதை நேரிலே பார்த்ததும் இல்லை .கல்லூரி வந்த பின்பு  என் வகுப்பு நண்பன் வீட்டு கொலு பொம்மைகளையும் அதற்க்கு அவன் விளக்கும் கதைகளையும் ஆர்குட் மூலமே கண்ட அனுபவம் மட்டுமே உண்டு . என் பிறந்த இடத்தில் போய் கொலு என்றால் என்னது கொள்ளுத்தாத்தாவா என்று கேட்பர். வேண்டுமானால்  கடந்த சில வருடங்களின்  கேபிள் டிவி யின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒருவேளை அறிந்திருக்கக்கூடும் .
 
புரட்டாசி மாதத்தில் தசரா நடக்கும் நாளுக்கு பாத்து நாள் முன்னே கோயிலில் கால் நட்டி பக்தர்கள் காப்பு கட்டி மாலை போட்டு விடுவர். ஒவ்வொருவரும் ஒரு ஒரு வேடத்தில் பவனி வருவதைப் பார்க்கவே வருடா வருடம் அந்த விழாவை பலர் எதிர் நோக்கியிருப்பர். அம்மன் ,காளி, பரதேசி ,பேய் என்று அவர்கள் போடும் வேடங்களின் எண்ணிக்கை அதிகம் . அதிலும் ஒரு குழுவாய் அவர்கள் வருகையில் அந்த இரவு ஜெக ஜோதியாய் இருக்கும் .குழுவில் எப்படியும் குறைந்தது ஒரு 20 பேர் மாலை போட்ட பக்கதர்கள் இருப்பர் . கண்டிப்பாய் ஒரு காளி வேடம் போடுபவர் இருப்பார் அவர்தான் அந்த குழுவிற்கே தலைவர் . ஒரு மேள தாளக் குழுவும் அவர்கள் பயணிக்க ஒரு வண்டியும் இருக்கும் .தனி நபர்கள் பகல் நேரங்களில் வீடு வீடாக வேடமிட்டு தர்மம் எடுப்பதும் குழு ஆட்கள் இரவு நேரங்களில் தர்மம் எடுப்பதும் வழக்கம் .வீட்டில் இருந்த வரை பெரும்பாலும் நான் உறங்கிய பிறகே குழுக்கள் வரும் .ஊர்க்கோயிலில் இருந்து ஆரம்பிக்கும் அவர்களின் ஊர்வலம் கட்டக்கடைசியாய் எங்கள் தெருவை அடைகையில் எப்படியும் நடுநிசி மணி 1 ஆகிவிடும் . காணிக்கையாய் பணம் மற்றும் அந்த நேரத்தில் வயலில் விளைந்த பொருளும் வைக்கப்படும் . இந்த வருடம் அவர்களின் வசூல் குறைவாய்த்தான் இருக்கும் . இப்பொழுது வயல்களில் அறுவடை முடிந்து உளுந்தும் ,பாசிப் பயறும் மட்டுமே உள்ளது . சுழற்சி முறையில் நடக்கும் விவசாயத்தில் இந்த ஆண்டு இரண்டு முறை தொடர்ச்சியாய் நெற்பயிர் இட்டதினால் இந்த மாதம் உளுந்து விளைச்சல் வந்துவிட்டது . சரியாக உளுந்தும் நெல்லும் மாறி மாறி வந்து நெல் விளைச்சல் வந்திருந்தால் குழுவின் வசூலும் அதிகமாய் இருக்கும் . குழுவாய் வருகையில் பெரும்பாலும் அவர்களுக்கு மரக்காய் மூலமே நெல் வைக்கப் படும் . நடு இரவிலும் சாக்கு பிரித்து அம்மாவும் அப்பாவும் மரக்காய் வைத்து அளந்து போடுவதை பல முறை முழுவதும் களைந்து போகாத உறக்கத்தில் கண்களை கசக்கிகொண்டே பார்த்திருக்கிறேன் .(அளவைகள் பல உண்டு காப்பிடி, உலக்கு, நாழி , பக்கா ,மரக்கா -ஏறுவரிசை )

வாசலில் வந்ததும் வேடம் அணிந்தவர்களையே முத்தாரம்மனாய் பாவித்து அவர்களை வணங்கியதும் நம்மையும் ஆசீர்வதித்து கையில் விபூதி தந்து அடுத்த வீடு போவர் . காலையில் எழுந்து கண்ணாடியில்  பார்கையில் உச்சந்தலையில்  நிறைய வெள்ளை முடிகள் இருக்கும் . அனைத்தும் முந்தின இரவு வந்த தெய்வங்களின் திருநீறு உபயத்தினால் . கைல குடுக்குற திருநீரை விட தலையில் போடும் அளவு அதிகமாய் இருக்கும் . தலையில் போட்டு பின்னர் நம் நெற்றியில் அவர்கள் கைகளினாலே பூசியும் விடுவர் . அதுவரை அமைதியாய் வரும் சாமி (மாலை போட்ட பின் அவர்களை சாமி என்று அழைப்பதுதான் வழக்கம் ) கூட எங்கள் வீட்டைக்  கடந்ததும் வேகமெடுத்து பக்தியில் ஆடத் தொடங்கும் . (அந்த ஆட்டம் பக்தியா  அல்லது கடமையா என்பது அம்மனுக்கே வெளிச்சம் )காரணம் தெரு முனையில் இருக்கும் முத்தாரம்மன் கோயில் . இப்படியாக இவர்களின் வசூல் வேட்டையும் வருடா வருடம் அம்மன் பெயர் சொல்லி நடக்கும் . எங்கள் வீட்டிலும் அம்மன் பெயரைச் சொல்லி வருபவர்களுக்கு கொடுப்பதினால் நம் வீட்டில் ஏதும் குறைந்து விடுவதும் இல்லை என்பர் . நிஜம்தான் அள்ளி அள்ளி கொடுக்க கொடுக்க ,( பல நேரங்களில் உறவினர்கள் பை பையாக  கொண்டு போவர் ) வீட்டின் செல்வம்தான் உயர்ந்தது .தசரா அன்று சாயங்காலம் சுற்று வட்டார மக்கள் கோயிலை நோக்கி படையெடுப்பர் .அதில் அம்மனை தரிசிக்கப் போகும் கூட்டத்தைவிட அங்கு நடக்கும் ஆடல் பாடல் கூத்து போன்ற கேளிக்கை நிகழ்சிகள் பார்க்கவே கூட்டம் அதிகமாய் போகும் .நான் போன வரையிலும் இவை வெகு சிறப்பாய் நடந்தது இப்பொழுது  அது எந்த அளவில் இருக்கின்றது என்று தெரியவில்லை . (நான் கலந்து கொண்டு பதினைந்து வருடங்கள் இருக்கும் )

நேற்றைய செய்தி பேப்பரில் இன்னும் ஒரு வாரத்தில் குலசையில் தசரா ஆரம்பிக்கும் என்று படிக்கையிலேயே மனதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சியும் கூடவே வருத்தமும் வந்து போனது . வீட்டில் கடைசிக் குழந்தை நான் என்பதால் பெரும்பாலும் பெற்றவர்களுடன் கோயில் போகும் பாக்கியம் எனக்கு மட்டுமே கிட்டும் . அப்படி பல வருடங்கள் தொடர்ச்சியாய் ஐந்தாம் வகுப்பு வரை குலசை சென்றிருக்கிறேன் . போகையிலே இரவு உண்ண மணக்க மணக்க அம்மாவின் கைப்பக்குவத்தில் புளி சாதம் கட்டி கூடவே எடுத்துப் போவோம் . எப்படியும் நாங்கள் வருவோம் என்றே அங்கிருக்கும் சிவன் கோயிலில் எங்களுக்கும் ஒரு இடம் சிவனால் ஒதுக்கபட்டிருக்கும் . சுத்திலும் கேட்கும் இரைச்சலினூடே கொண்டு போன புளிசாதம் உண்டு அங்கிருக்கும் கோயில் கிணற்றில் தண்ணீர் குடித்து ஒரு குட்டி தூக்கம் போட்டு ............... ஒருமுறை கால் விரலிலே அடிபட்டு வலியில் நான் தூங்காமல் போன அந்த இரவு இன்று வரை ஒவ்வொரு தசராவிலும் மனதில் வந்து போகும் .

ஒரு குட்டி தூக்கம் போட்ட பிறகு பத்து மணிவாக்கில் அப்படியே ஆடல் பாடல் நிகழ்சிகள் நடக்கத் துவங்கும் . நாங்களும் ஒரு ஒரு குழுவிற்கும் சென்று பார்க்க ஆரம்பிப்போம் . அங்கு பல குழுக்கள் எங்கிருந்து எல்லாமோ வந்திருக்கும் . அப்படியே கொஞ்சம் நகர்ந்து போகையில் கடற்கரையில் திரை கட்டி படம் ஓடிக்கொண்டு இருக்கும்  . அங்கங்கு பல கடைகள் பஜ்ஜி , சொஜ்ஜியில் பிசியாய் இருக்கும் . கடற்கரை போகும் வழி ஒரு வீட்டின் வாசல் அளவே இருக்கும் பல நேரங்களில் திட்டிக் கொண்டே போயிருக்கிறேன் . திடிரென்று திரைப்படம் நிறுத்தப்படும் மொத்த கூட்டமும் ஒரு திசையில் தலையைத் திருப்ப சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது நான் அவ்ளோ உயரம் . (இப்போ போனாலு எதுவும் தெரியாது ) . என்னைப் போல் குழந்தைகள் எல்லாம் அப்பாவின் தோளிலே இருப்போம் . அசுரனும் தெய்வமும் எதிரெதிரே அலங்காரத்துடன் இருப்பர் . அம்மன் இருக்கும் தேரிலிருந்து ஒருவர் கையில் ஒரு ஈட்டியுடன் ஓடி வருவார் . எதிரே இருக்கும் அசுரனின் தலை அந்த ஈட்டியால் தூக்கிப் போடப் படும் . அவ்ளோதான் சூர சம்காரம் முடிந்தது .மீண்டும் நிறுத்தப் பட்ட படம் ஓடும் மக்கள் சிதறி அங்கங்கு போவர் . மிச்சமிருக்கும் நேரத்தை எப்படியோ செலவிட்டு அதிகாலையில் அம்மா , அப்பா மட்டும் கிணத்து தண்ணீரில் குளியலை முடித்து (நான் ஒருமுறை கூட கோயிலில் குளிச்சதே இல்ல ) தேங்காய் பழம் வாங்கி அர்ச்சனை பண்ண வந்தால் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசை இருக்கும் . பொறுமையாய் வரிசையில் நின்று அர்ச்சனை முடிந்து வீட்டில் இருப்போருக்கு (அக்கா மட்டும்தான் இருப்பா ஏன்னா அவ பெரிய பொண்ணு ) ஒலைபெட்டியில் ஏணிப்படி முட்டாயும்(என் எதிரி அது ) காரச் சேவும் வாங்கிக் கொண்டு சிறப்பு பேருந்து பிடித்து வீடு வந்து ஒரு தூக்கம் போடுவோம் . அந்த வருட தசரா அத்துடன் நிறைவுறும் , அதன் பின்னரும் ஒரு பத்து நாட்கள் தசரா பற்றிய பேச்சுக்கள் எங்கும் தொடர்ந்து கேட்ட வண்ணமே இருக்கும் .

அதிலும் பல நேரங்களில் சாமிகள் எனக்கு மட்டும் திருநீறு தராமல் போய்விடுவர் . நானும் ஒவ்வொரு ஆண்டும் ஏன் எனக்கு மட்டும் சாமி திருநீறு தர மாட்டேங்குது என்று அப்பாவியாய் பல முறை ஏன் அம்மாவையும் அக்காவையும் துளைத்தெடுத்திருக்கிறேன். ஒருமுறை வீட்டுக்கு வந்த ஒரு சாமியாடி திடீரென சாமி வந்து இவளிடம் இந்த வீட்டு கன்னி தெய்வம் குடியிருக்கிறது என்று சொல்ல என் அக்காவும் அம்மாவும் அப்படியா சாமி என கேட்க எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை . ஆமா அப்போ நான் கொஞ்சம் வளர்ந்துடேனே அதனால அவர் சொன்னதின் மேல் எனக்கு நம்பிகை இல்லை .கன்னி தெய்வம் என்பது குடும்பத்தில் சின்ன வயதில் இறந்து போன பெண்ணை தெய்வமாய் நினைத்து வழிபடுவர் . பொங்கலின் மறுநாள் சர்க்கரை பொங்கல் , பிச்சிப்பூ , பசுமாட்டுப் பால் ,தேங்காய் பழம் உடைத்து வழிபடுவோம் . எங்கள் வீட்டிலும் என் அப்பாவின் சகோதரி சிறு வயதிலேயே இறந்து போய்விட்டார் . அவரை தெய்வமாய் நினைத்து அவர் வாழ்ந்த என் அப்பாவின் பூர்வீக இடத்தில் வருடாவருடம் வழிபாடு நடத்துவோம் . அப்படி ஒருமுறை நடக்கையில் கொதித்துக் கொண்டிருந்த சர்க்கரைப் பொங்கலில் என் சித்தப்பா மாடு விட்ட மூத்திரம் தெறித்து பானையில் விழ என் அம்மா ஆத்திரத்தில் இனி இந்த இடத்துக்கு நான் வரவே மாட்டேன் , அடுத்த வருடம் தொட்டு உனக்கு என் வீட்டின் ஒரு மூலையில் வைத்து பூஜை செய்கிறேன் என்று வீர சபதம் போட்டு வந்தார் . இன்றுவரையும் பூஜை அதன்பின் எங்கள் வீட்டிலேயே தொடர்கிறது .

தசரா பார்க்க வேண்டுமா கண்ணாத்தாள் படம் பாருங்கள் அதில் முதல் காட்சியே முத்தாரம்மன் கோயிலில் இருந்தே ஆரம்பிக்கும் . எழுத்து போடுகையிலேயே பின்காட்சியில் கோயிலின் தசரா காட்சிகள் ஓடும் . குஸ்பூ கதை சொல்லும் காட்சிகள் எல்லாமே கோயில் தசரா காட்சிகளே .மைசூருக்கு அடுத்து குலசை தசரா பெயர் பெற்றது . தசரா முடிந்த பின்னர் இப்பொழுது இருக்கும் சூழல்கள் அண்ணாவிடம் கேட்டு பதிவிடுகிறேன் .
Posted by மதார் at 4:31 PM
Labels: அனுபவம், குலசை, கோயில், தசரா, முத்தாரம்மன் .
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ▼  October (3)
      • IRCTC -பொங்கலோ பொங்கல்
      • குலசை தசராவும் - நவராத்திரி கொலுவும்
      • வீடு வாடைகைக்கு
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio