skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Sunday, February 20, 2011

என்னக் கொடுமை இது ?.

காலேஜ் இரண்டாம் ஆண்டு , அங்கிருக்கும் இரண்டு ஹாஸ்டல் ஒன்று பவானி ஒன்று அமராவதி . பவானி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளின் விடுதி .முதலாம் ஆண்டு மாடியிலும் இரண்டாம் ஆண்டு கீழேயும் அறைகள் இருக்கும் . ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொருநாள் என ஹாஸ்டல் உள்ளே வரும் வார்டன் அன்று திடிரென்று வர எந்த அறையிலும் எந்த பெண்ணும் இல்லை .விடுதியே காலியாய் இருக்க உள்ளே வந்த அவருக்கோ அதிர்ச்சி .மாலை ஆறு மணிக்கு  மேல் எவரும் உள்ளே வர அனுமதி இல்லை .அப்படி இருக்க மாலை  நேரத்தில் ஹாஸ்டல் வெறுமையாய் இருக்க சுற்றும் முற்றும் சந்தேகத்துடன் நோக்கியவரின் கண்களில் வித்தியாசமாய் அந்த அறை வாசல் பட்டது . ஒரு அறைக்கு நான்கு மாணவிகளே அவர்களின் செருப்புகள் ஆளுக்கு இரண்டு என வைத்துக் கொண்டாலும் பத்து செருப்புகள் வாசலில் இருக்கலாம் . ஆனால் அங்கே கிடந்த செருப்புகளின் குவியல் காணாமல் போன மாணவியரைக் காட்டி கொடுத்தது .

பூட்டி இருந்த அறையின் கதவைத் தட்டினார் . ஏதோ ஒரு சக மாணவி என்று கதவைத் திறந்த பெண்ணுக்கோ அதிர்ச்சி உள்ளே குழுமி இருந்த மற்றவர்களுக்கும் அதிர்ச்சியுடன் கூடிய பயம் கண்களிலும் முகத்திலும் தெரிய விக்கித்து நின்றனர் .ஆம் அந்த ஒரு அறையினுள் ஒரு கூட்டமே இருந்தது .அங்கு கூடி இருந்தவர்களில் வந்தவரின் மாணவியரும் கூட பலர் இருந்தனர் . அவர் எலெக்ட்ரிகல் துறைக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர் .எங்கள் விடுதியும் பேராசிரியர்களின் குடியிருப்பும் ஒரே இடத்திலே இருக்கும் .வெளியில் இருந்து பார்ப்போருக்கு 300 மாணவிகள் தங்கி இருக்கும் பெண்கள் விடுதி உள்ளே இருப்பதே தெரியாது அந்த அளவு மரங்கள் மறைத்துக் கொண்டிருக்கும் . அவரின் சில மாணவிகள் மாட்டிக் கொண்ட பயத்தில் கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டனர் .போச்சு அத்தனை பேரின் மானமும் போச்சு மாட்டிக்கொண்டோம் .இதில் இருந்து எப்படி தப்பிப்பது கையும் களவுமாய் மாட்டிக் கொண்டோம் பொய் சொல்ல அங்கே இடமில்லை .வார்டன் கண்ணாரக் கண்டபின் வேறு எந்த விசாரணையும் தேவை இல்லை .நேரம் போகப் போக அத்தனைபேரின் படிப்பு எதிர்காலம் என்று ஒவ்வொருவரின் முகத்திலும் பல எண்ண ஓட்டங்கள் பிரதிபலிக்க அவர் வகுப்பு மாணவிகள் கண்ணிரண்டும் அருவியாய் மாறிக் கொண்டிருந்தன .

அவரைப் பார்த்த அதிர்ச்சியில் ஓடிக் கொண்டிருந்த படத்தைக் கூட நிறுத்த யாருக்கும் தெரியவில்லை .அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர் அது வேலை செய்து கொண்டிருக்க வார்டன் படத்தை நிறுத்தச் சொல்ல பல்லியாய் பல பேர் சுவற்றோடு ஒட்டிக் கொண்டு கைகளை பிசைந்து கொண்டு எண்ண சொல்லப் போகிறார் என்று அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிந்தோம் .நானும் அந்தக் கூட்டத்தில் ஒரு ஆள் . விடுதியில்  படம் பார்த்து வார்டனிடம் மாட்டிக் கொண்டால் அந்த விஷயம் வெளியே தெரிந்தால் எவ்வளவு அசிங்கமாய் இருக்கும் .குறிப்பாய் காலேஜ் பசங்களுக்கு தெரிந்தால் எப்படி இருக்கும் அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது.வார்டன் என்னென்னவோ பேசினார் கடைசியில் படம் பார்த்த அத்தனை பேரின் பெயர்களும் துறை வாரியாய் ஒரு பேப்பரில் எழுதப் பட்டது .படத்தின் CD அவர் கைக்கு போனது . நடப்பது அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் இனி என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது .வார்டன் அவர் வீட்டுக்கு போக அவர் பின்னாடியே மன்னிப்பு கேட்க  அத்தனை பேரும் அவர் வீட்டு வாசலில் போய் நின்றோம் .அவர் எங்களை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை .சரி இனி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அனைவரும் அறைக்கு திரும்பினோம் .

பாதியிலேயே நின்று போன அந்தப் படத்தின் அடுத்த பாதி நான் ஒருவருடம் கழித்தே பார்த்தேன் . இத்தனை நடந்த பிறகும் எங்களுக்கு பெரிய அளவில் தண்டனை ஏதும் கிடைக்கவில்லை .அந்த விஷயம் அத்தோடு முடிந்து போனது . படத்தின் பெயர் தெரிந்து கொள்ள ரொம்ப ஆவலாய் இருக்கிறதா . விடுதி வாழ்க்கை பற்றி பேச்சு வருகையில் இந்த நிகழ்ச்சி கண்டிப்பாய் எங்கள் மலரும் நினைவுகளில் தவறாமல் இடம்பெறும் .அந்த அளவு வரலாற்று சிறப்பு பெற்ற படம் துப்புபவர்கள் வரிசையில் வரவும் "அழகிய தீயே ".என்னக் கொடுமை இது ?.
Posted by மதார் at 8:59 PM
Labels: அனுபவம், காலேஜ்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ▼  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ▼  February (1)
      • என்னக் கொடுமை இது ?.
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio